Ayah :
1
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,
Ayah :
2
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
Ayah :
3
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
Ayah :
4
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
Ayah :
5
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
Ayah :
6
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
Ayah :
7
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
Ayah :
8
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.