Ayah :
1
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
Ayah :
2
مَلِكِ ٱلنَّاسِ
மக்களின் அரசன்,
Ayah :
3
إِلَٰهِ ٱلنَّاسِ
மக்களின் வணக்கத்திற்குரியவன்,
Ayah :
4
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
Ayah :
5
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
Ayah :
6
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.