Ayah :
1
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,
Ayah :
2
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.
Ayah :
3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
Ayah :
4
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
Ayah :
5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).