Ayah :
1
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
Ayah :
2
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,
Ayah :
3
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
“நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்.
Ayah :
4
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.
Ayah :
5
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
Ayah :
6
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
Ayah :
7
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.
Ayah :
8
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
Ayah :
9
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).