அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الانشقاق - ஸூரா இன்ஷிகாக்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
வானம் பிளந்துவிடும் போது,
வசனம் : 2
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது;
வசனம் : 3
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
இன்னும், பூமி விரிக்கப்படும்போது,
வசனம் : 4
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,
வசனம் : 5
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது, இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படியும்போது (மனிதனே நீ செய்த நன்மை, தீமையின் பலனை பார்ப்பாய்)!
வசனம் : 6
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் (சேருகிற வரை நல்லதை செய்வதில் அல்லது தீமை செய்வதில்) சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். ஆக, நீ அவனை (மறுமையில்) சந்திப்பாய். (அவன் உனது செயல்களுக்கு ஏற்ப உனக்குக் கூலி கொடுப்பான்.)
வசனம் : 7
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),
வசனம் : 8
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.)
வசனம் : 9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
இன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.
வசனம் : 10
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,
வசனம் : 11
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
(எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான்.
வசனம் : 12
وَيَصۡلَىٰ سَعِيرًا
இன்னும் சயீர் எனும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் நுழைந்து அவன் தீயில் எரிவான்.
வசனம் : 13
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
நிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.
வசனம் : 14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.
வசனம் : 15
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
ஏனில்லை! (அவன் கண்டிப்பாக இறைவனிடம் வருவான்.) நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
வசனம் : 16
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
ஆக, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!
வசனம் : 17
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
இரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!
வசனம் : 18
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,
வசனம் : 19
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள்.
வசனம் : 20
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
ஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
வசனம் : 21
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
இன்னும், (அவர்களுக்கு என்ன நேர்ந்தது?) அவர்களுக்கு முன்னர் அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் (இறைவனுக்கு) சிரம் பணிவதில்லை!
வசனம் : 22
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள்.
வசனம் : 23
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.
வசனம் : 24
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
ஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
வசனம் : 25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
(அவர்களில்) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது