அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة النازعات - ஸூரா நாஸிஆத்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
வசனம் : 2
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
(நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!
வசனம் : 3
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
நீந்துவோர் மீது சத்தியமாக!
வசனம் : 4
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
(இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!
வசனம் : 5
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,)
வசனம் : 6
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்.
வசனம் : 7
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்.
வசனம் : 8
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்.
வசனம் : 9
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்.
வசனம் : 10
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
(நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’
வசனம் : 11
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
வசனம் : 12
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.)
வசனம் : 13
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
(மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.)
வசனம் : 14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
வசனம் : 15
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?

வசனம் : 16
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள்.
வசனம் : 17
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான்.
வசனம் : 18
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”
வசனம் : 19
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
“இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”
வசனம் : 20
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
வசனம் : 21
فَكَذَّبَ وَعَصَىٰ
ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.
வசனம் : 22
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
வசனம் : 23
فَحَشَرَ فَنَادَىٰ
இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்.
வசனம் : 24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
வசனம் : 25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்).
வசனம் : 26
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
(அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
வசனம் : 27
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்.
வசனம் : 28
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.)
வசனம் : 29
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
வசனம் : 30
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்.
வசனம் : 31
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
வசனம் : 32
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்.
வசனம் : 33
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்).
வசனம் : 34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,
வசனம் : 35
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்).
வசனம் : 36
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)
வசனம் : 37
فَأَمَّا مَن طَغَىٰ
ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,
வசனம் : 38
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,
வசனம் : 39
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.
வசனம் : 40
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,
வசனம் : 41
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
(அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும்.
வசனம் : 42
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.
வசனம் : 43
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)
வசனம் : 44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது.
வசனம் : 45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
(நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.)
வசனம் : 46
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது