அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة القيامة - ஸூரா கியாமா

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!
வசனம் : 2
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
வசனம் : 3
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?
வசனம் : 4
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குலம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.
வசனம் : 5
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
வசனம் : 6
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
வசனம் : 7
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,
வசனம் : 8
وَخَسَفَ ٱلۡقَمَرُ
இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,
வசனம் : 9
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,
வசனம் : 10
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”
வசனம் : 11
كَلَّا لَا وَزَرَ
அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).
வசனம் : 12
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ
அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
வசனம் : 13
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.
வசனம் : 14
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ
மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)
வசனம் : 15
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ
அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
வசனம் : 16
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ
(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.
வசனம் : 17
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ
நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.
வசனம் : 18
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ
ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்பீராக!)
வசனம் : 19
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ
பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.

வசனம் : 20
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ
அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள்.
வசனம் : 21
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ
இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
வசனம் : 22
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும்.
வசனம் : 23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ
தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
வசனம் : 24
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ
இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும்.
வசனம் : 25
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ
அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அது அறிந்துகொள்ளும்.
வசனம் : 26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ
அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
வசனம் : 27
وَقِيلَ مَنۡۜ رَاقٖ
இன்னும், ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டால்,
வசனம் : 28
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ
இன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
வசனம் : 29
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
இன்னும், (மறுமை எனும்) கெண்டைக் காலுடன் (உலகம் எனும்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
வசனம் : 30
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ
அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
வசனம் : 31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
ஆக, அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
வசனம் : 32
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
வசனம் : 33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ
பிறகு, அவன் தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
வசனம் : 34
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ
உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
வசனம் : 35
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ
பிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
வசனம் : 36
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى
மனிதன், எண்ணுகிறானா, தான் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுவான் என்று?
வசனம் : 37
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ
அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
வசனம் : 38
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ
பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். ஆக, (அவனை இறைவன்) படைத்தான். இன்னும், (அவனை முழு மனிதனாக பார்ப்பவனாக செவியுறுபவனாக பேசுபவனாக) சரிப்படுத்தினான்.
வசனம் : 39
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
ஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான்.
வசனம் : 40
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ
இ(த்தகைய பேராற்றல் உள்ள இறை)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா?
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது