அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
இன்னும், அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அந்த நபியை அனுப்பினான்). அவர்கள் இவர்களுடன் (இப்போது) வந்து சேரவில்லை. (ஆனால், அவர்கள் இந்த நபித்தோழர்களுக்கு பின்னர் வருகிற அடுத்த தலைமுறையினர் ஆவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. இன்னும், அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
(நபியே!) கூறுவீராக! “யூதர்களே! நிச்சயமாக நீங்கள்தான் அல்லாஹ்வின் நண்பர்கள், மற்ற மக்கள் அல்ல, என்று நீங்கள் பிதற்றினால், நீங்கள் (உங்களது இந்த கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை ஆசைப்ப(ட்டு காட்)டுங்கள்!”
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
ஆக, தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் (இரண) அருளைத் தேடுங்கள்! நீங்கள் வெற்றி அடைவதற்காக நீங்கள் அல்லாஹ்வை அதிகம் (புகழ்ந்தும் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்தியும்) நினைவு கூருங்கள்!
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
இன்னும், (முஸ்லிம்களில் சிலர் இருக்கிறார்கள்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளதுதான் (உலகத்தின்) வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.”
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்