அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الرحمن - ஸூரா ரஹ்மான்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
ٱلرَّحۡمَٰنُ
பேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்),
வசனம் : 2
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;
வசனம் : 3
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
மனிதனைப் படைத்தான்.
வசனம் : 4
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.
வசனம் : 5
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் அடிப்படையில் (ஓடிக்கொண்டு) இருக்கின்றன.
வசனம் : 6
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் (தடித்த தண்டுகளை உடைய) மரங்களும் (அவற்றை படைத்த இறைவனாகிய அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.
வசனம் : 7
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
இன்னும், வானம், அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். இன்னும், தராசை – நீதத்தை - பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக அமைத்தான்.
வசனம் : 8
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (நீதத்தை மீறாதீர்கள்! எவர் மீதும் அநியாயம் செய்யாதீர்கள்!)
வசனம் : 9
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! இன்னும், தராசில் (பொருள்களை குறைத்து மக்களுக்கு) நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்.
வசனம் : 10
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
இன்னும், பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.
வசனம் : 11
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ
அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.
வசனம் : 12
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ
தொலிகளையும் வைக்கோலையும் உடைய தானியங்களும் (இதர) உணவு(ப் பொருள்)களும் அதில் இருக்கின்றன.
வசனம் : 13
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 14
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ
சுட்ட களிமண்ணைப் போல் உள்ள, சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை அவன் படைத்தான்.
வசனம் : 15
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ
இன்னும், நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.
வசனம் : 16
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

வசனம் : 17
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ
சூரியன் தோன்றுகிற இரு இடங்களுடைய அதிபதி; இன்னும், சூரியன் மறைகிற இரு இடங்களுடைய அதிபதி அவன்.
வசனம் : 18
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?
வசனம் : 19
مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ
(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.
வசனம் : 20
بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ
அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் (அல்லாஹ் நிர்ணயித்த) எல்லையை மீறாது.
வசனம் : 21
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?
வசனம் : 22
يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ
அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.
வசனம் : 23
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 24
وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட பிரமாண்டமான கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் செய்தான்.)
வசனம் : 25
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?
வசனம் : 26
كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ
அதன் மீது இருக்கிற எல்லோரும் அழிந்துவிடுவார்கள்.
வசனம் : 27
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.
வசனம் : 28
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 29
يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கிறான்.
வசனம் : 30
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 31
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ
மனித, ஜின் வர்க்கத்தினரே (உங்களிடம் விசாரணை செய்வதற்காக) உங்களை கவனிப்போம்.
வசனம் : 32
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 33
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ
ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.
வசனம் : 34
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 35
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். ஆக, நீங்கள் (அவனை) பழிவாங்க முடியாது. (நீங்கள் உங்களை பாதுகாக்கவும் முடியாது.)
வசனம் : 36
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 37
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ
ஆக, வானம் பிளந்து விட்டால், அது காய்ந்த எண்ணெயைப் போல் செந்நிறத்தில் ஆகிவிடும்.
வசனம் : 38
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 39
فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ
ஆக, அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (விசாரித்த பின்னர்தான் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அறிய முடியும் என்ற அவசியம் இருக்காது.)
வசனம் : 40
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

வசனம் : 41
يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ
குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். ஆக, உச்சிமுடிகளையும் கால் பாதங்களையும் (இறுக்கமாக) பிடிக்கப்ப(ட்டு நரகத்தில் வீசி எறியப்ப)டும்.
வசனம் : 42
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 43
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ
இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பித்த நரகமாகும்.
வசனம் : 44
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ
அ(ந்)த (நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.
வசனம் : 45
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 46
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.
வசனம் : 47
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 48
ذَوَاتَآ أَفۡنَانٖ
(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)
வசனம் : 49
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 50
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
அவை இரண்டிலும் (நீர் பீறிட்டு) ஓடும் இரண்டு ஊற்றுகள் உண்டு.
வசனம் : 51
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 52
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் அவை இரண்டிலும் உண்டு.
வசனம் : 53
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 54
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ
விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டுத் துணியால் ஆனதாக இருக்கும். இன்னும், இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (அவற்றை உண்ண விரும்புபவர்களுக்கு மிக) சமீபமாக இருக்கும்.
வசனம் : 55
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 56
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் மனிதனோ ஜின்னோ அவர்களை தொட்டிருக்க மாட்டார்கள்.
வசனம் : 57
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 58
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ
அவர்கள் (-அந்த வெள்ளை நிற கண்ணழகிகள்) மாணிக்கத்தையும் பவளத்தையும் போன்று இருப்பார்கள்.
வசனம் : 59
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 60
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ
(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நல்லதுக்குக் கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நல்லதைத் தவிர வேறு உண்டா?
வசனம் : 61
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 62
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.
வசனம் : 63
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 64
مُدۡهَآمَّتَانِ
(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.
வசனம் : 65
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 66
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ
அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.
வசனம் : 67
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

வசனம் : 68
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ
அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரீச்சமும் மாதுளையும் இருக்கும்.
வசனம் : 69
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 70
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ
அவற்றில் (குணத்தால்) மிக சிறப்பானவர்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.
வசனம் : 71
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 72
حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ
(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)
வசனம் : 73
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 74
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
இவர்களுக்கு முன்னர் மனிதனோ ஜின்னோ அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
வசனம் : 75
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 76
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ
(சொர்க்கவாசிகள்) பச்சை நிற (உறைகள் உடைய) தலையணைகள் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
வசனம் : 77
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
வசனம் : 78
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிகுந்த பாக்கியமானதும், மிகவும் உயர்ந்ததும், மிக்க மகத்துவமானதும் ஆகும்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது