அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الروم - ஸூரா ரூம்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
الٓمٓ
அலிஃப் லாம் மீம்.
வசனம் : 2
غُلِبَتِ ٱلرُّومُ
ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்,
வசனம் : 3
فِيٓ أَدۡنَى ٱلۡأَرۡضِ وَهُم مِّنۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُونَ
(அவர்கள் தோற்கடிக்கப்பட்டது ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப் பகுதியில். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை வெற்றிகொண்டு) தோற்கடிப்பார்கள்.
வசனம் : 4
فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ
சில ஆண்டுகளில் இது நடைபெறும். (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) இன்னும், அந்நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
வசனம் : 5
بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
(அந்த மகிழ்ச்சி) அல்லாஹ்வின் உதவியினால் ஆகும். அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன், மகா கருணையாளன்.

வசனம் : 6
وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
(இதை) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறிய மாட்டார்கள்.
வசனம் : 7
يَعۡلَمُونَ ظَٰهِرٗا مِّنَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ عَنِ ٱلۡأٓخِرَةِ هُمۡ غَٰفِلُونَ
அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்புற (தோற்ற)த்தை அறிவார்கள். அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் கவனமற்றவர்கள் ஆவார்கள்.
வசனம் : 8
أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ
அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இன்னும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
வசனம் : 9
أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
இவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே! இவர்களை விட ஆற்றலால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். இன்னும், அவர்கள் பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களுடைய இறைத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
வசனம் : 10
ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ
பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றைக் கேலி செய்பவர்களாக இருந்தனர்.
வசனம் : 11
ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ
அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் உருவாக்குகிறான். பிறகு, அவனிடமே, நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
வசனம் : 12
وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ
இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும் சிரமப்படுவார்கள்.
வசனம் : 13
وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ
அவர்களுக்கு அவர்க(ளை வழிகெடுத்த அவர்க)ளுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) (தங்களால் வழிகெடுக்கப்பட்ட) தங்களது நண்பர்க(ள் தங்களுக்கு செய்த வழிபாடுக)ளை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
வசனம் : 14
وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَتَفَرَّقُونَ
இன்னும், மறுமை நிகழும் நாளில் - அந்நாளில் அவர்கள் (ஒவ்வொருவரும் தத்தமது அமலுக்குரிய கூலியைப் பெறுவதற்கு) பிரிந்து விடுவார்கள்.
வசனம் : 15
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்கள் (சொர்க்கத்தின்) தோட்டத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.

வசனம் : 16
وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآيِٕ ٱلۡأٓخِرَةِ فَأُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ
ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ, நமது வசனங்களையும் மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.
வசனம் : 17
فَسُبۡحَٰنَ ٱللَّهِ حِينَ تُمۡسُونَ وَحِينَ تُصۡبِحُونَ
ஆகவே, நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும் (-சூரியன் மறைந்த பின்னரும்) காலைப் பொழுதை அடையும்போதும் (சூரியன் உதிக்கும் முன்னரும் - மஃரிபு மற்றும் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றி) அல்லாஹ்வைத் துதியுங்கள்.
வசனம் : 18
وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَعَشِيّٗا وَحِينَ تُظۡهِرُونَ
இன்னும், வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியப் பொழுதில் இருக்கும்போதும் (அல்லாஹ்வை தொழுது துதியுங்கள்).
வசனம் : 19
يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَيُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ وَكَذَٰلِكَ تُخۡرَجُونَ
அவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகிறான்: இன்னும், பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் பூமியிலிருந்து மீண்டும் உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
வசனம் : 20
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٞ تَنتَشِرُونَ
இன்னும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான், அவன் உங்களை (-உங்கள் மூலப் பிதாவை) மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
வசனம் : 21
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
இன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை - அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
வசனம் : 22
وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفُ أَلۡسِنَتِكُمۡ وَأَلۡوَٰنِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡعَٰلِمِينَ
இன்னும், வானங்களும் பூமியும் படைக்கப்பட்டிருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் வேறுபட்டு இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். கல்வியாளர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
வசனம் : 23
وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱبۡتِغَآؤُكُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ
இன்னும், நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும்; அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருள் சம்பாதிக்க) தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். (உபதேசங்களை) செவியேற்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
வசனம் : 24
وَمِنۡ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَيُحۡيِۦ بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
இன்னும், அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுவதும்; இன்னும், வானத்திலிருந்து மழையை அவன் இறக்குவதும்; அதன் மூலம் பூமியை - அது மரணித்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். சிந்தித்து புரிகிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.

வசனம் : 25
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ بِأَمۡرِهِۦۚ ثُمَّ إِذَا دَعَاكُمۡ دَعۡوَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ إِذَآ أَنتُمۡ تَخۡرُجُونَ
இன்னும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால், அப்போது நீங்கள் (அதிலிருந்து உயிருடன்) வெளியேறுவீர்கள்.
வசனம் : 26
وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ
இன்னும், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்(களை அவனே படைத்தான். ஆகவே அவர்)கள் அவனுக்கே உரியவர்கள். எல்லோரும் அவனுக்கே (வாழ்விலும் சாவிலும் உயிர்த்தெழுவதிலும்) பணிந்து நடக்கிறார்கள். (அவனது விதியை அவர்கள் யாராலும் மீற முடியாது.)
வசனம் : 27
وَهُوَ ٱلَّذِي يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهۡوَنُ عَلَيۡهِۚ وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைப்பான். அதுவோ அவனுக்கு மிக இலகுவானதாகும். இன்னும், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத் தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
வசனம் : 28
ضَرَبَ لَكُم مَّثَلٗا مِّنۡ أَنفُسِكُمۡۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِي مَا رَزَقۡنَٰكُمۡ فَأَنتُمۡ فِيهِ سَوَآءٞ تَخَافُونَهُمۡ كَخِيفَتِكُمۡ أَنفُسَكُمۡۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡقِلُونَ
(இணைவைப்பாளர்களே!) அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். நாம் உங்களுக்கு (மட்டும் உரிமையாக்கி) கொடுத்த (செல்வத்)தில் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) யாரும் உங்களுக்கு பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிடுவதும் முடியுமா? அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை - (உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகள் உங்களுடன் பங்காளிகளாக ஆகுவதை பயப்படுகிறீர்கள். யாரையும் கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று நினைக்கிறீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ் எப்படி தனது படைப்புகளை தனக்கு உரிமையானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு எந்தத் தகுதியும் யாருக்கும் இல்லையே!) சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
வசனம் : 29
بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَهۡوَآءَهُم بِغَيۡرِ عِلۡمٖۖ فَمَن يَهۡدِي مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி, தங்கள் மன விருப்பங்களை பின்பற்றுகிறார்கள். ஆக, அல்லாஹ் எவரை வழிக் கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? இன்னும், உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இல்லை.
வசனம் : 30
فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
ஆக, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கும் நிலையில் உமது முகத்தை(யும் உமது சமுதாய மக்களுடன் அல்லாஹ்வின்) மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அதுதான். அ(ந்த மார்க்கத்)தில்தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படை(ப்பின் அமை)ப்பை மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (தங்கள் தவறை) அறிய மாட்டார்கள்.
வசனம் : 31
۞ مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
(நீங்கள் அனைவரும்) அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக இருங்கள். இன்னும், அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
வசனம் : 32
مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ
தங்களது மார்க்கத்தை(யும் வழிபாடுகளையும் இறைவன் அல்லாதவர்களுக்காக) பிரித்து பல (கடவுள்களை வணங்கி, பல) பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.

வசனம் : 33
وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرّٞ دَعَوۡاْ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيۡهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنۡهُ رَحۡمَةً إِذَا فَرِيقٞ مِّنۡهُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ
இன்னும், மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை - அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக - அழைக்கிறார்கள். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் (பொய்யான தெய்வங்களை) இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
வசனம் : 34
لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆக, (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! ஆக, (மறுமையில் உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
வசனம் : 35
أَمۡ أَنزَلۡنَا عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُواْ بِهِۦ يُشۡرِكُونَ
(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அ(ந்த ஆதாரமான)து பேசுகிறதா?
வசனம் : 36
وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ فَرِحُواْ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ إِذَا هُمۡ يَقۡنَطُونَ
இன்னும், மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்னும், அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் அவர்களை ஒரு தீமை அடைந்தால், அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகிறார்கள்.
வசனம் : 37
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
வசனம் : 38
فَـَٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
ஆகவே, உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இ(வ்வாறு தர்மம் கொடுப்ப)துதான் சிறந்ததாகும். இன்னும், இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
வசனம் : 39
وَمَآ ءَاتَيۡتُم مِّن رِّبٗا لِّيَرۡبُوَاْ فِيٓ أَمۡوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرۡبُواْ عِندَ ٱللَّهِۖ وَمَآ ءَاتَيۡتُم مِّن زَكَوٰةٖ تُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُضۡعِفُونَ
மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்.
வசனம் : 40
ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۖ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَفۡعَلُ مِن ذَٰلِكُم مِّن شَيۡءٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்பவர் உங்கள் தெய்வங்களில் இருக்கிறாரா? (அல்லாஹ்வாகிய) அவனோ மிக பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
வசனம் : 41
ظَهَرَ ٱلۡفَسَادُ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ أَيۡدِي ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعۡضَ ٱلَّذِي عَمِلُواْ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது, மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களை சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக.

வசனம் : 42
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلُۚ كَانَ أَكۡثَرُهُم مُّشۡرِكِينَ
(நபியே! இணைவைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அ(ழிக்கப்பட்ட அ)வர்களில் அதிகமானவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தனர்.
வசனம் : 43
فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ ٱلۡقَيِّمِ مِن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۖ يَوۡمَئِذٖ يَصَّدَّعُونَ
ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
வசனம் : 44
مَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِأَنفُسِهِمۡ يَمۡهَدُونَ
யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். இன்னும், எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான) படுக்கைகளை விரித்துக் கொள்கிறார்கள்.
வசனம் : 45
لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ
இறுதியாக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் தன் அருளிலிருந்து கூலி கொடுப்பான். (மேலும், பாவிகளுக்கு தண்டனை கொடுப்பான்). நிச்சயமாக அவன் (தன்னை) நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.
வசனம் : 46
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن يُرۡسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٖ وَلِيُذِيقَكُم مِّن رَّحۡمَتِهِۦ وَلِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
இன்னும், காற்றுகளை (-மழையின்) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்; கப்பல்கள் - அவனுடைய கட்டளையின்படி (கடலில்) – செல்வதற்கும்; அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகிறான்).
வசனம் : 47
وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَٱنتَقَمۡنَا مِنَ ٱلَّذِينَ أَجۡرَمُواْۖ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். ஆக, அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆக, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். இன்னும், (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
வசனம் : 48
ٱللَّهُ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَيَبۡسُطُهُۥ فِي ٱلسَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهُۥ كِسَفٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ
அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகிறான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகிறான். ஆக, மழையை - அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக - பார்க்கிறீர். ஆக, அவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதை அருளினால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
வசனம் : 49
وَإِن كَانُواْ مِن قَبۡلِ أَن يُنَزَّلَ عَلَيۡهِم مِّن قَبۡلِهِۦ لَمُبۡلِسِينَ
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர், அ(ந்த மழையான)து அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர் கவலைப்பட்டவர்களாக (மனச்சோர்வடைந்தவர்களாக, நிராசையடைந்தவர்களாக) இருந்தனர்.
வசனம் : 50
فَٱنظُرۡ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحۡمَتِ ٱللَّهِ كَيۡفَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ ذَٰلِكَ لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை - அது மரணித்த பின்னர் - அவன் எப்படி உயிர்ப்பிக்கிறான் (என்பதைக் கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

வசனம் : 51
وَلَئِنۡ أَرۡسَلۡنَا رِيحٗا فَرَأَوۡهُ مُصۡفَرّٗا لَّظَلُّواْ مِنۢ بَعۡدِهِۦ يَكۡفُرُونَ
நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்துவிட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அ(து அழிந்த)தற்குப் பின்னர் அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
வசனம் : 52
فَإِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ
ஆக, (நபியே!) நிச்சயமாக நீர், (உமது) அழைப்பை இறந்தவர்களுக்கு கேட்கவைக்க முடியாது. இன்னும், செவிடர்களுக்கும் கேட்கவைக்க முடியாது, அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
வசனம் : 53
وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ
இன்னும், குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நீர் செவியுறச் செய்ய முடியாது, நம்பிக்கை கொள்பவர்களுக்கே தவிர. ஆக, அவர்கள்தான் (முஸ்லிம்கள் - நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
வசனம் : 54
۞ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُم مِّن ضَعۡفٖ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ ضَعۡفٖ قُوَّةٗ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ قُوَّةٖ ضَعۡفٗا وَشَيۡبَةٗۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡقَدِيرُ
அல்லாஹ்தான் உங்களை (இந்திரியம் என்ற) பலவீனமான ஒரு பொருளிலிருந்து படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
வசனம் : 55
وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقۡسِمُ ٱلۡمُجۡرِمُونَ مَا لَبِثُواْ غَيۡرَ سَاعَةٖۚ كَذَٰلِكَ كَانُواْ يُؤۡفَكُونَ
மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள், “தாங்கள் சில மணி நேரமே அன்றி (மண்ணறையில்) தங்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் வாழும் போதும்) பொய் சொல்பவர்களாக இருந்தார்கள்.
வசனம் : 56
وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِۖ فَهَٰذَا يَوۡمُ ٱلۡبَعۡثِ وَلَٰكِنَّكُمۡ كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கி இருந்தீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும், நீங்கள் (இந்த நாள் உண்மையில் நிகழும் என்பதை) அறியா(மலும் நம்பிக்கை கொள்ளா)தவர்களாக இருந்தீர்கள்.
வசனம் : 57
فَيَوۡمَئِذٖ لَّا يَنفَعُ ٱلَّذِينَ ظَلَمُواْ مَعۡذِرَتُهُمۡ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ
ஆக, அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது.
வசனம் : 58
وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖۚ وَلَئِن جِئۡتَهُم بِـَٔايَةٖ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا مُبۡطِلُونَ
இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். இன்னும், நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.
வசனம் : 59
كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ
இவ்வாறுதான், (இந்த வேதத்தின் உண்மையை) அறியாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
வசனம் : 60
فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ وَلَا يَسۡتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
ஆக, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகும்! (மறுமையை) உறுதி கொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாகக் கருதிவிட வேண்டாம். (அப்படி அவர்கள் உமது பொறுமையை இலேசாக பார்த்துவிட்டால் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட முயற்சிப்பார்கள்.)
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது