அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة المؤمنون - ஸூரா முஃமினூன்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
வசனம் : 2
ٱلَّذِينَ هُمۡ فِي صَلَاتِهِمۡ خَٰشِعُونَ
அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
வசனம் : 3
وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ
இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள்.
வசனம் : 4
وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ
இன்னும், அவர்கள் ஸகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள்.
வசனம் : 5
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை (விபச்சாரத்தை விட்டும் ஓரின சேர்க்கையை விட்டும்) பாதுகாப்பார்கள்.
வசனம் : 6
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
தங்கள் மனைவியர்களிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடம் தவிர. (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர்.
வசனம் : 7
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
ஆக, (தனது மனைவி, அல்லது தனது அடிமைப் பெண் ஆகிய) இவர்கள் அல்லாத பெண்களிடம் யார் (காமத்தை) தேடுவார்களோ அவர்கள்தான் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறிய) எல்லை மீறிகள் ஆவார்கள்.
வசனம் : 8
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள்.
வசனம் : 9
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٰتِهِمۡ يُحَافِظُونَ
இன்னும், அவர்கள் தங்கள் தொழுகைகளை பேணி பாதுகாப்பார்கள்.
வசனம் : 10
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ
அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்,
வசனம் : 11
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
வசனம் : 12
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن سُلَٰلَةٖ مِّن طِينٖ
திட்டவட்டமாக களி மண்ணிலிருந்து (படைக்கப்பட்ட முதல் மனிதனின்) இந்திரியத்திலிருந்து மனிதர்களை நாம் படைத்தோம்.
வசனம் : 13
ثُمَّ جَعَلۡنَٰهُ نُطۡفَةٗ فِي قَرَارٖ مَّكِينٖ
பிறகு, அவனை உறுதியான ஒரு தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்) ஓர் இந்திரியத் துளியாக நாம் வைத்தோம்.
வசனம் : 14
ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ
பிறகு, அந்த இந்திரியத் துளியை ஓர் இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் ஆக்கினோம். ஆக, அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த சதைத் துண்டை எலும்புகளாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன் மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் உருவாக்கினோம். (பொருள்களை) செய்பவர்களில் மிக அழகிய (முறையில்) செய்பவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
வசனம் : 15
ثُمَّ إِنَّكُم بَعۡدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ
பிறகு, நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் மரணித்து விடுவீர்கள்.
வசனம் : 16
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ
பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள்.
வசனம் : 17
وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ
திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்புகளைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக (மறந்தவர்களாக) இல்லை.

வசனம் : 18
وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ
இன்னும், வானத்திலிருந்து மழையை (குறிப்பிட்ட) ஓர் அளவிற்கு நாம் இறக்கினோம். ஆக, அதை பூமியில் தங்க வைத்தோம். (நாம் நாடினால்) நிச்சயமாக நாம் அதை (பூமியிலிருந்து) போக்கி விடுவதற்கு ஆற்றலுடையவர்கள்.
வசனம் : 19
فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ
ஆக, பேரீட்சை மரங்கள்; இன்னும், திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் (இன்னும் பலவகையான) அதிகமான பழங்களும் உண்டு. இன்னும், அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
வசனம் : 20
وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ
இன்னும், ஸினாய் மலையிலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய ஒரு மரத்தை நாம் படைத்தோம். அது எண்ணையையும் (-அதற்குரிய காயையும்) உண்பவர்களுக்கு ஒரு சுவையான உணவையும் முளைப்பிக்கிறது.
வசனம் : 21
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ
நிச்சயமாக கால்நடையில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலிருந்து (வெளிவரக்கூடிய பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அதிகமான பலன்களும் உள்ளன. இன்னும் அவற்றிலிருந்து (கிடைக்கும் மாமிசத்தையும்) நீங்கள் புசிக்கிறீர்கள்.
வசனம் : 22
وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ
இன்னும், நீங்கள் அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.
வசனம் : 23
وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ
திட்டவட்டமாக நூஹை அவருடைய மக்களிடம் நாம் அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (அவனுடைய தண்டனையை) அஞ்ச வேண்டாமா?
வசனம் : 24
فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ
ஆக, அவருடைய மக்களில் நிராகரித்து கொண்டிருந்த பிரமுகர்கள் கூறினார்கள்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர இல்லை. அவர் உங்களைப் பார்க்கிலும் மேன்மை அடைய நாடுகிறார். இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்க(ளுக்கு தூதுத்துவத்தை கொடுத்து அவர்க)ளை (பூமியில் உங்களுக்கு தூதர்களாக) இறக்கி இருப்பான். இதை, எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
வசனம் : 25
إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ
அவர் ஓர் ஆடவரே தவிர (அவர் தூதர்) இல்லை. அவருக்கு பைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. ஆக, ஒரு காலம் வரை (அவருக்கு என்ன நிகழப்போகிறது என பொறுத்திருந்து) எதிர்பார்த்திருங்கள்.
வசனம் : 26
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ
அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் எனக்கு நீ உதவுவாயாக!
வசனம் : 27
فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ
ஆக, அவருக்கு நாம் வஹ்யி அறிவித்தோம்: நமது கண்களுக்கு முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் நீர் கப்பலை செய்வீராக! ஆக, நமது கட்டளை வந்துவிட்டால்; இன்னும், அடுப்பு பொங்க ஆரம்பித்துவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் இரண்டு ஜோடிகளையும் உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றுவீராக, அவர்களில் எவன் மீது (இறைவனின்) வாக்கு முந்திவிட்டதோ அவனைத் தவிர. (அவனை ஏற்றாதீர்!) இன்னும், அநியாயக்காரர்கள் விஷயத்தில் (அவர்களுக்காக பரிந்து பேசி) என்னிடம் நீர் உரையாடாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்.

வசனம் : 28
فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
ஆக, நீரும் உன்னுடன் இருப்பவரும் கப்பலில் ஏறிவிட்டால் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அநியாயக்கார மக்களிடமிருந்து அவன் எங்களை பாதுகாத்தான்.”
வசனம் : 29
وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ
இன்னும் கூறுவீராக: “என் இறைவா! (உனது) பாக்கியங்கள் நிறைந்த ஓர் இடத்தில் என்னை தங்க வைப்பாயாக! தங்க வைப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.”
வசனம் : 30
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ وَإِن كُنَّا لَمُبۡتَلِينَ
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. நிச்சயமாக நாம் (அவர்களை) சோதிப்பவர்களாக இருந்தோம்.
வசனம் : 31
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு ஒரு தலைமுறையினரை நாம் (புதிதாக) உருவாக்கினோம்.
வசனம் : 32
فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ
ஆக, அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்:) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆக, (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?
வசனம் : 33
وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ
இன்னும், அவருடைய மக்களில் நிராகரித்துக் கொண்டிருந்த, இன்னும் மறுமையின் சந்திப்பை பொய்யாக்கி கொண்டிருந்த பிரமுகர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அதிக வசதிகளை கொடுத்திருந்தோம். அவர்கள் கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதரே தவிர இவர் இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார். இன்னும், நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.”
வசனம் : 34
وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ
இன்னும் (அவர்கள் கூறினார்கள்:), “நீங்கள் உங்களைப் போன்ற மனிதருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்.”
வசனம் : 35
أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ
“நீங்கள் மரணித்து, மண்ணாகவும் (சதையற்ற) எலும்புகளாகவும் ஆகிவிட்டால் (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் (உயிருடன் பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?”
வசனம் : 36
۞ هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ
“நீங்கள் எதை வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வெகு தூரமாக இருக்கிறது! அது வெகு தூரம்!” (அது நடக்கவே நடக்காது என்றும் அவர்கள் கூறினார்கள்).
வசனம் : 37
إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ
வாழ்க்கை என்பது நமது உலக வாழ்க்கையைத் தவிர (இதற்கு பின்னர் வேறு வாழ்க்கை) இல்லை. நாம் (சிறிது காலத்திற்கு பின்னர்) இறந்து விடுகிறோம். நாம் (இப்போது) வாழ்கிறோம். (-நம்மில் சிலர் இறந்துவிட புதிதாக சிலர் பிறந்து வாழ்வார்கள். அவ்வளவுதான். நமது மரணத்திற்கு பின்னர்) நாம் எழுப்பப்பட மாட்டோம்.
வசனம் : 38
إِنۡ هُوَ إِلَّا رَجُلٌ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا وَمَا نَحۡنُ لَهُۥ بِمُؤۡمِنِينَ
அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிய ஒரு மனிதராகவே தவிர இல்லை. நாங்கள் அவரை நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.
வசனம் : 39
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ
அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் (அவர்களுக்கு எதிராக) நீ எனக்கு உதவுவாயாக!
வசனம் : 40
قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ
(அல்லாஹ்) கூறினான்: வெகு விரைவில் நிச்சயமாக அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
வசனம் : 41
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
ஆக, உண்மையில் அவர்களை கடுமையான சத்தம் பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விட்டோம். ஆக, அநியாயக்கார கூட்டம் அழிந்துபோகும்.
வசனம் : 42
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு (புதிய பல) தலைமுறைகளை நாம் உருவாக்கினோம்.

வசனம் : 43
مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ
எந்த ஒரு சமுதாயமும் தமது தவணையை முந்தவும் மாட்டார்கள். இன்னும், பிந்தவும் மாட்டார்கள்.
வசனம் : 44
ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ
பிறகு, நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை தொடர்ந்து சிலரை அழித்தோம். இன்னும், அவர்க(ளின் செய்திக)ளை (பிற மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். ஆக, நம்பிக்கை கொள்ளாத மக்கள் அழிந்து போவார்கள்.
வசனம் : 45
ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ
பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம்,
வசனம் : 46
إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடமும். ஆக, அவர்கள் பெருமையடித்தனர். இன்னும், அவர்கள் (மக்கள் மீது) ஆதிக்கம் செலுத்தக்கூடிய (எல்லை மீறிய அநியாயக்கார) கூட்டமாக இருந்தனர்.
வசனம் : 47
فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ
ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனித (இனத்தை சேர்ந்த இருவ)ர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? அவ்விருவரின் சமுதாயமோ எங்களுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கிறார்கள்.”
வசனம் : 48
فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ
ஆக, அவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர்.
வசனம் : 49
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ
இன்னும், திட்டவட்டமாக மூஸாவிற்கு, – அவ(ருடைய சமுதாயமாகிய இஸ்ரவேல)ர்கள் நேர்வழி பெறுவதற்காக - நாம் வேதத்தைக் கொடுத்தோம்.
வசனம் : 50
وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ
இன்னும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். இன்னும், உறுதியான உயரமான சமமான இடத்திற்கும் ஓடுகின்ற நீரூற்றுக்கும் அவ்விருவரை நாம் ஒதுங்க வைத்தோம்.
வசனம் : 51
يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ
தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். இன்னும், நல்லதை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன் ஆவேன்.
வசனம் : 52
وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ
நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். இன்னும், நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
வசனம் : 53
فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ
ஆக, அவர்கள் தங்களது மார்க்கத்தை தங்களுக்கு மத்தியில் பல வேதங்களாக(வும் பல பிரிவுகளாகவும்) பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு பெருமைப்படுகிறார்கள்.
வசனம் : 54
فَذَرۡهُمۡ فِي غَمۡرَتِهِمۡ حَتَّىٰ حِينٍ
ஆகவே, (நபியே!) அவர்களை அவர்களுடைய வழிகேட்டில் (சிறிது) காலம் வரை விடுவீராக!
வசனம் : 55
أَيَحۡسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٖ وَبَنِينَ
(ஏகத்துவக் கொள்கையை பின்பற்றாத) அவர்கள் எண்ணுகிறார்களா?, நாம் அவர்களுக்கு செல்வத்திலிருந்தும் ஆண் பிள்ளைகளிலிருந்தும் எதைக் கொடுக்கிறோமோ,
வசனம் : 56
نُسَارِعُ لَهُمۡ فِي ٱلۡخَيۡرَٰتِۚ بَل لَّا يَشۡعُرُونَ
அது அவர்களுக்கு நாம் நன்மைகளை விரைந்து செய்கிறோம் என்று (எண்ணுகிறார்களா?) மாறாக, அவர்கள் உ(ண்மையை புரிந்து)ணர மாட்டார்கள்.
வசனம் : 57
إِنَّ ٱلَّذِينَ هُم مِّنۡ خَشۡيَةِ رَبِّهِم مُّشۡفِقُونَ
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் நடுங்கி இருக்கிறார்களோ,
வசனம் : 58
وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ,
வசனம் : 59
وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمۡ لَا يُشۡرِكُونَ
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கவில்லையோ,

வசனம் : 60
وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ
இன்னும், எவர்கள் தாங்கள் கொடுக்கும் தர்மத்தை கொடுப்பார்களோ, அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் அவர்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும் நிலையில்,
வசனம் : 61
أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ
அவர்கள்தான் நன்மைகளில் விரைந்து செல்கிறார்கள். இன்னும், அவர்கள் அவற்றை முந்தி செய்பவர்கள் ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்காக இறைவனிடம் நற்பாக்கியம் முந்திவிட்டது.)
வசனம் : 62
وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்புகளுடைய செயல்கள் எழுதப்பட்ட,) சத்தியத்தை பேசுகிற ஒரு புத்தகம் இருக்கிறது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அது அறிவிக்கும்.) இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
வசனம் : 63
بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ
மாறாக, அவர்களது உள்ளங்கள் இ(ந்த வேதத்)தை அறியாமல் இருப்பதில் இருக்கின்றன. இன்னும், அவர்களுக்கு அவை அல்லாத (இறை நம்பிக்கையாளர்கள் செய்கின்ற நல்லறங்கள் அல்லாமல்) வேறு (பாவ) செயல்கள் (மட்டுமே) உள்ளன. அவர்கள் அவற்றைத்தான் செய்கிறார்கள். (அவர்கள் நல்லோர் செய்கின்ற நல்லறங்களை செய்ய மாட்டார்கள்.)
வசனம் : 64
حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ
இறுதியாக, அவர்களில் (பெரும் பாவிகளாக) இருந்த சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடைய நிராகரிப்பாளர்களை) தண்டனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் (உதவி கேட்டு) கதறுகிறார்கள்.
வசனம் : 65
لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ
இன்றைய தினம் கதறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள்.
வசனம் : 66
قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ
திட்டமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டு வந்தன. ஆக, நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது பின்னோக்கி செல்பவர்களாக இருந்தீர்கள்.
வசனம் : 67
مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ
(அவர்கள் செய்கின்ற) அ(ந்)த (தீய, பாவ செயல்களி)னால் பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கிறார்கள்). இரவில் இதைப் (பற்றி கேலியாக) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில் மக்களிடம்) வீணான (தவறான கருத்)தைக் கூறுகிறார்கள்.
வசனம் : 68
أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ
ஆக, இந்த குர்ஆனை இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லது, முன்னோர்களான இவர்களது மூதாதைகளுக்கு வராத ஒன்று இவர்களிடம் வந்து விட்டதா? (அதனால் அவர்கள் இதை புறக்கணிக்கிறார்களா?)
வசனம் : 69
أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ
அல்லது, இவர்கள் தங்களது தூதரை (அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று) அறியவில்லையா? அதனால், அவர்கள் அவரை மறுக்கிறார்களா?
வசனம் : 70
أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ
அல்லது, “அவருக்கு பைத்தியம் இருக்கிறது (எனவேதான் இப்படி உளருகிறார்)” என்று இவர்கள் கூறுகின்றனரா? மாறாக, இவர் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளார். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், உண்மையை வெறுக்கிறார்கள்.
வசனம் : 71
وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ
உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றி (காரியங்களை நடத்தி)னால் வானங்களும், பூமியும் இன்னும், அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்கு விவரித்துவிட்டோம். ஆனால், அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கிறார்கள்.
வசனம் : 72
أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
(இந்த சத்தியத்தை அவர்களுக்கு நீர் போதித்ததற்காக) அவர்களிடம் நீர் கூலி கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கிறார்களா?) ஆக, உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. இன்னும், அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
வசனம் : 73
وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
இன்னும், (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கமே அழைக்கிறீர்.
வசனம் : 74
وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ
இன்னும், நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் (அந்த நேரான) பாதையை விட்டு விலகிவிடக் கூடியவர்கள்தான்.

வசனம் : 75
۞ وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
அவர்கள் மீது நாம் கருணை புரிந்து, அவர்களுக்குள்ள தீங்கை (-பஞ்சத்தை) நாம் நீக்கி விட்டால் அவர்கள் தங்களது வரம்பு மீறுதலில் தறி கெட்டு தடுமாறியவர்களாக அளவுகடந்து பிடிவாதம் பிடித்திருப்பார்கள்.
வசனம் : 76
وَلَقَدۡ أَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ فَمَا ٱسۡتَكَانُواْ لِرَبِّهِمۡ وَمَا يَتَضَرَّعُونَ
அவர்களை தண்டனையைக் கொண்டு திட்டவட்டமாக நாம் பிடித்தோம். ஆக, அவர்கள் தங்கள் இறைவனுக்கு பணியவில்லை. இன்னும், (அவனுக்கு முன்) பணிந்து மன்றாடவும் இல்லை.
வசனம் : 77
حَتَّىٰٓ إِذَا فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا ذَا عَذَابٖ شَدِيدٍ إِذَا هُمۡ فِيهِ مُبۡلِسُونَ
இறுதியாக, அவர்கள் மீது கடுமையான தண்டனையின் ஒரு வாசலை நாம் திறந்தால் அப்போது அவர்கள் அதில் (-அந்த தண்டனையில் தங்கள் பாவத்தை நினைத்து) கவலைப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
வசனம் : 78
وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
இன்னும், அவன்தான் உங்களுக்கு (முதலாவதாக) செவியையும் பார்வையையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.
வசனம் : 79
وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ
இன்னும், அவன்தான் உங்களை பூமியில் படைத்தான். அவனிடம்தான் நீங்கள் (மறுமையில் விசாரணைக்காக) ஒன்று திரட்டப்படுவீர்கள்.
வசனம் : 80
وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ
இன்னும், அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடைய செயல்தான். ஆக, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
வசனம் : 81
بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ
(அவர்கள் அத்தாட்சிகளை சிந்திக்கவில்லை.) மாறாக, (தங்கள்) முன்னோர்கள் கூறியது போன்றே கூறினார்கள்.
வசனம் : 82
قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் மரணித்துவிட்டால்; இன்னும், மண்ணாகவும் எலும்புகளாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (உயிருடன் மீண்டும்) எழுப்பப்படுவோமா?
வசனம் : 83
لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
திட்டவட்டமாக எங்களுக்கும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளுக்கும் இது (-இப்படித்தான்) வாக்களிக்கப்பட்டது. (ஆனால், இது நாள் வரை அப்படி ஏதும் நிகழவில்லை. ஆகையால்) இது முன்னோர்களின் கட்டுக் கதைகளாகவே தவிர இல்லை.”
வசனம் : 84
قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: பூமியும் அதில் உள்ளவர்களும் யாருக்கு உரிமையானவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்)!
வசனம் : 85
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ
அல்லாஹ்விற்கே உரிமையானவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். ஆக, (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா?
வசனம் : 86
قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ
(நபியே!) கூறுவீராக: ஏழு வானங்களின் இறைவன் யார்? இன்னும், மகத்தான அர்ஷின் இறைவன் யார்?
வசனம் : 87
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ
அவர்கள் கூறுவார்கள்: “(அவை அனைத்தும்) அல்லாஹ்விற்கே உரியவையாகும்.” நீர் கூறுவீராக: ஆக, நீங்கள் (அந்த அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?
வசனம் : 88
قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
(நபியே!) கூறுவீராக: யாருடைய கரத்தில் (பிரபஞ்சம்) எல்லாவற்றின் பேராட்சி இருக்கிறது? இன்னும், அவன் பாதுகாப்பு அளிக்கிறான். அவனுக்கு எதிராக (யாரும் யாருக்கும்) பாதுகாப்பு அளிக்க முடியாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் கூறுங்கள்).
வசனம் : 89
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ
அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் பேராட்சி) அல்லாஹ்விற்கு உரியதே!” (நபியே!) நீர் கூறுவீராக: “ஆக, நீங்கள் (அந்த உண்மையை நம்பிக்கை கொள்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்!”

வசனம் : 90
بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
(வானவர்கள் அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள், சிலைகளை வணங்குவது இறைவனை வணங்குவதுதான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை.) மாறாக, நாம் அவர்களுக்கு விரிவாக உண்மையைக் கூறிவிட்டோம். இன்னும் நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்.
வசனம் : 91
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
அல்லாஹ் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும், (படைப்புகளை அவன் முதலாவதாக படைத்தபோது) அவனுடன் வேறு கடவுள்கள் யாரும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும், தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் (தங்களுக்குள் சண்டையிட்டு) சிலர், சிலரை வென்று இருப்பார்கள். (இறைவனைப் பற்றி) அவர்கள் எதை வர்ணிக்கிறார்களோ அதை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் ஆவான். (ஆக, அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, அவனுடன் வேறு கடவுளும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.)
வசனம் : 92
عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
(அவன்) மறைவையும் வெளிப்படையையும் நன்கறிந்தவன். ஆக, அவர்கள் (அவனுக்கு) எதை இணைவைத்து வணங்குகிறார்களோ அதை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
வசனம் : 93
قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ
(நபியே!) கூறுவீராக: “என் இறைவா! அவர்கள் (தண்டனையில்) எதை எச்சரிக்கப்படுகிறார்களோ அதை நீ எனக்கு காண்பித்தால் (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே)!
வசனம் : 94
رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
ஆக, என் இறைவா! அநியாயக்கார மக்களில் என்னையும் நீ ஆக்கிவிடாதே!
வசனம் : 95
وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ
நிச்சயமாக நாம் அவர்களுக்கு எதை எச்சரிக்கிறோமோ அதை நாம் உமக்கு காண்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவர்கள்தான்.
வசனம் : 96
ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ
(சகிப்புத் தன்மை என்ற) மிக அழகிய (குணத்)தின் மூலம் (அவர்களின் பகைமை என்ற) கெட்டதை தடுப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது விஷயத்திலும்) அவர்கள் வர்ணிப்பவற்றை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்.
வசனம் : 97
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ
(நபியே!) கூறுவீராக! என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் (அவர்களின் குழப்பங்களை விட்டும்) உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
வசனம் : 98
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ
இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களுக்குள்) வந்து கலந்துவிடுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
வசனம் : 99
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ
இறுதியாக, மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! என்னை (உலகத்திற்கு) திருப்பி அனுப்புவாயாக!
வசனம் : 100
لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
(அமல்களில்) நான் விட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்புவாயாக! என்று அவன் கூறுவான்). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புவாயாக என்ற பேச்சு) நிச்சயமாக இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். இன்னும், அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (ஆகையால் அவர்கள் உலகிற்கு திரும்ப முடியாது.)
வசனம் : 101
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ
எக்காளத்தில் (முதல் முறை அல்லது இரண்டாவது முறை) ஊதப்பட்டால் அவர்களுக்கு மத்தியில் அந்நாளில் உறவுகள் அறவே (பலன் தரக்கூடியதாக) இருக்காது. இன்னும், அவர்கள் தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை) விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
வசனம் : 102
فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
ஆக, எவரின் (நன்மைகளின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
வசனம் : 103
وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ
இன்னும், எவர்களுடைய (நன்மைகளின்) எடைகள் (கனமற்று) இலகுவாகிவிட்டனவோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள் ஆவார்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
வசனம் : 104
تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ
நரக நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். இன்னும், அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளியே தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

வசனம் : 105
أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ
எனது (குர்ஆனின்) வசனங்கள் (உலகத்தில்) உங்களுக்கு முன் ஓதப்பட்டு வந்தன அல்லவா? ஆனால், நீங்கள் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.
வசனம் : 106
قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ
அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களது துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. இன்னும், நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்.
வசனம் : 107
رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ
எங்கள் இறைவா! எங்களை இ(ந்த நரகத்)திலிருந்து வெளியேற்றிவிடு! ஆக, (பாவங்களின் பக்கம்) நாங்கள் திரும்பச் சென்றால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான். (அப்போது நீ எங்களை கண்டிப்பாக தண்டிக்கலாம்.)
வசனம் : 108
قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ
அவன் கூறுவான்: இ(ந்த நரகத்)தில் நீங்கள் (நிரந்தரமாக) இழிவுடன் தங்கி விடுங்கள். இன்னும், என்னிடம் பேசாதீர்கள்.
வசனம் : 109
إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ
நிச்சயமாக விஷயமாவது, என் அடியார்களில் ஒரு கூட்டம், “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீது கருணை புரி! நீயோ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
வசனம் : 110
فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ
ஆக, அவர்களை நீங்கள் கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இறுதியாக, அவர்கள் என் நினைவை உங்களுக்கு மறக்க வைத்து விட்டார்கள். (அவர்களை கேலி செய்வதில் ஈடுபட்டு என்னை நீங்கள் மறந்து விட்டீர்கள்.) இன்னும், நீங்கள் அவர்களைப் பார்த்து (எப்போதும் கேலிசெய்து) சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
வசனம் : 111
إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ
அவர்கள் (உலகத்தில்) பொறுமையாக இருந்த காரணத்தால் இன்றைய தினம் நிச்சயமாக நான் அவர்களுக்கு கூலி கொடுத்தேன், “நிச்சயமாக அவர்கள்தான் (சொர்க்கத்தின்) பாக்கியம் பெற்றவர்கள்” என்று.
வசனம் : 112
قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ
(அல்லாஹ்) கூறுவான்: பூமியில் நீங்கள் எத்தனை பல ஆண்டுகள் தங்கி இருந்தீர்கள்.
வசனம் : 113
قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ
அவர்கள் கூறுவார்கள்: ஒரு நாள்; அல்லது, ஒரு நாளில் சில பகுதி தங்கி இருந்தோம். ஆக, (சரியாக) எண்ணக் கூடியவர்களிடம் நீ கேட்பாயாக!
வசனம் : 114
قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
அவன் கூறுவான்: நீங்கள் (பூமியில்) குறைவாகவே தவிர தங்கவில்லை. நீங்கள் (மறுமையில் தங்கப் போகும் காலத்தை) அறிந்திருக்க வேண்டுமே!
வசனம் : 115
أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?
வசனம் : 116
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ
ஆக, அரசனாகிய, உண்மையான இறைவனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் இழிவான வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
வசனம் : 117
وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ
இன்னும், யார் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைப்பாரோ - அதற்கு அவரிடம் அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க - அவருடைய விசாரணையெல்லாம் அவரது இறைவனிடம்தான். நிச்சயமாக (அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க மறுக்கின்ற) நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.
வசனம் : 118
وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ
(நபியே!) கூறுவீராக! என் இறைவா! (என்னை) மன்னிப்பாயாக, இன்னும், (என் மீது) கருணை புரிவாயாக! நீதான் கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது