அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الماعون - ஸூரா மாஊன்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?
வசனம் : 2
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
வசனம் : 3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.
வசனம் : 4
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,
வசனம் : 5
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
வசனம் : 6
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.
வசனம் : 7
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது