வசனம் :
1
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
வசனம் :
2
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
வசனம் :
3
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
வசனம் :
4
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
வசனம் :
5
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
வசனம் :
6
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
வசனம் :
7
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.