Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة الواقعة - ஸூரா வாகிஆ

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
நிகழக்கூடிய சம்பவம் (-மறுமை) நிகழ்ந்தால்,
Ayah : 2
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
Ayah : 3
خَافِضَةٞ رَّافِعَةٌ
(அது, பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியதும், (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியதும் ஆகும்.
Ayah : 4
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
பூமி பலமாக குலுக்கப்பட்டால்,
Ayah : 5
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
Ayah : 6
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் (அல்லது காற்றில் பறக்கும் காய்ந்த சருகுகளைப் போல்) அவை ஆகிவிடும்.
Ayah : 7
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
இன்னும், நீங்கள் மூன்று வகையினர்களாக ஆகிவிடுவீர்கள்.
Ayah : 8
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
ஆக, அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?
Ayah : 9
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
இன்னும், துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
Ayah : 10
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
இன்னும், (உலக வாழ்க்கையில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.
Ayah : 11
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
அவர்கள்தான் (அல்லாஹ்விற்கு) மிக சமீபமானவர்கள்.
Ayah : 12
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
“(அவர்கள்) நயீம்” எனும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
Ayah : 13
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).
Ayah : 14
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
இன்னும், பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
Ayah : 15
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
Ayah : 16
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

Ayah : 17
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
நிரந்தரமான (ஒரே வயதுடைய) சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள்,
Ayah : 18
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
குவளைகளுடன், கூஜாக்களுடன், தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடன்.
Ayah : 19
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
அதனால் (-அந்த மதுவினால்) அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். இன்னும், அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
Ayah : 20
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
இன்னும், அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,
Ayah : 21
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
அ(ந்த நல்ல)வர்கள் மனம் விரும்புகின்ற பறவைகளின் மாமிசங்களுடனும் (சிறுவர்கள் சுற்றுவார்கள்).
Ayah : 22
وَحُورٌ عِينٞ
இன்னும், வெள்ளை நிறமான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
Ayah : 23
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
(அந்த அழகிகள்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் (இருப்பார்கள்).
Ayah : 24
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
அவர்கள் செய்துகொண்டிருந்த அமல்களுக்குக் கூலியாக (இந்த சொர்க்க இன்பங்கள் கொடுக்கப்படுவார்கள்).
Ayah : 25
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
அதில் அவர்கள் வீண் பேச்சுகளையோ பாவமான பேச்சுகளையோ செவியுற மாட்டார்கள்.
Ayah : 26
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
(உள்ளங்களை காயப்படுத்தாத) நல்ல பேச்சுகளையும் “ஸலாம்” (என்று ஒருவர் மற்றவருக்கு முகமன்) கூறுவதையும் தவிர (செவியுற மாட்டார்கள்).
Ayah : 27
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
இன்னும், வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
Ayah : 28
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
அவர்கள் முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகிலும்,
Ayah : 29
وَطَلۡحٖ مَّنضُودٖ
குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
Ayah : 30
وَظِلّٖ مَّمۡدُودٖ
நீங்காத நிழல்களிலும்,
Ayah : 31
وَمَآءٖ مَّسۡكُوبٖ
(நிற்காமல்) ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
Ayah : 32
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
அதிகமான பழங்களுக்கு அருகிலும்,
Ayah : 33
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
தீர்ந்துவிடாத, தடுக்கப்படாத (பழங்களுக்கு அருகிலும்),
Ayah : 34
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
உயர்வான விரிப்புகளிலும் வலது பக்கம் உடையவர்கள் இருப்பார்கள்.
Ayah : 35
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
இன்னும் அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்,
Ayah : 36
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
ஆக, அவர்களை நாம் ஆக்கி வைத்திருப்போம் (நிரந்தர) கன்னிகளாக,
Ayah : 37
عُرُبًا أَتۡرَابٗا
கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக,
Ayah : 38
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
வலது பக்கமுடையவர்களுக்காக.
Ayah : 39
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
(வலது பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்,
Ayah : 40
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
இன்னும், பின்னோரிலும் அதிகமானவர்கள் இருப்பார்கள்.
Ayah : 41
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
இன்னும், இடது பக்கமுடையவர்கள்! இடது பக்கமுடையவர்கள் யார்?
Ayah : 42
فِي سَمُومٖ وَحَمِيمٖ
கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
Ayah : 43
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
இன்னும், கரும் புகையின் நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்.
Ayah : 44
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
(இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.
Ayah : 45
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) ஆடம்பர சுகவாசிகளாக (சரீர இச்சையில் மூழ்கியவர்களாக) இருந்தனர்.
Ayah : 46
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
இன்னும், பெரும் பாவங்களை தொடர்ந்து பிடிவாதம் பிடித்தவர்களாக செய்துகொண்டிருந்தனர்.
Ayah : 47
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
“நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நாங்கள் (இந்த நிலைக்கு மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?”
Ayah : 48
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
“இன்னும், முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படுவார்கள்)?”
Ayah : 49
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
(நபியே!) நீர் கூறுவீராக! “நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்,
Ayah : 50
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
(அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.”

Ayah : 51
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
பிறகு, (இந்த நபியை) பொய்ப்பித்த வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
Ayah : 52
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
Ayah : 53
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
ஆக, அதில் இருந்து (உங்கள்) வயிறுகளை நிரப்புவீர்கள்.
Ayah : 54
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற நீரை குடிப்பீர்கள்.
Ayah : 55
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
ஆக, தாகித்த ஒட்டகங்கள் (தண்ணீர்) குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
Ayah : 56
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
இதுதான் (செயல்களுக்குரிய விசாரணை நடைபெற்று) கூலி (கொடுக்கப்படும்) நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
Ayah : 57
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
நாம்தான் உங்களைப் படைத்தோம். ஆக, நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?
Ayah : 58
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
Ayah : 59
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகும் சிசுவையும்) நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைக்கக்கூடியவர்களா?
Ayah : 60
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
நாம்தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (அது யாருக்கு, எப்போது வரும் என்று) நிர்ணயித்தோம். இன்னும் நாங்கள் இயலாதவர்கள் இல்லை,
Ayah : 61
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).
Ayah : 62
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
(படைப்புகள்) முதல் முறையாக உருவாக்கப்பட்டதை (-அவற்றை உருவாக்கியவன் யார் என்று) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். ஆக, (அப்படி இருக்க அந்த இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்று) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Ayah : 63
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
ஆக, நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கிறீர்களே, அதைப் பற்றி அறிவியுங்கள்!
Ayah : 64
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
அதை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது, நாம் (அதை) முளைக்க வைப்பவர்களா?
Ayah : 65
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
நாம் நாடினால் அதை (பயனற்ற) சருகுகளாக (பதருகளாக) ஆக்கிவிடுவோம். (உங்கள் அறுவடைகள் இந்த நிலைக்கு ஆகியதைப் பார்த்து அவை ஏன் இப்படி ஆகின என்று) நீங்கள் ஆச்சரியப்படுபவர்களாக (அல்லது, கவலைப்படுபவர்களாக) ஆகி இருப்பீர்கள்.
Ayah : 66
إِنَّا لَمُغۡرَمُونَ
“நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)
Ayah : 67
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
“மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் அப்போது நீங்கள் கூறுவீர்கள்).
Ayah : 68
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
ஆக, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
Ayah : 69
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
கார்மேகத்தில் இருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது, நாம் (அதை மேகத்தில் இருந்து) இறக்கக் கூடியவர்களா?
Ayah : 70
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். ஆக, (இந்த மாபெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றிசெலுத்த வேண்டாமா?
Ayah : 71
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
ஆக, நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!
Ayah : 72
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது, நாம் (அதை) உருவாக்கக் கூடியவர்களா?
Ayah : 73
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
நாம் அதை (-உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டுகிற) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு பலன் தரக்கூடியதாகவும் ஆக்கினோம்.
Ayah : 74
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
Ayah : 75
۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
ஆக, (தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
Ayah : 76
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
(இது எத்தகைய சத்தியம் என்று) நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாக இருக்கும்.

Ayah : 77
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்,
Ayah : 78
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
Ayah : 79
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
மிகவும் பரிசுத்தமான (வான)வர்களைத் தவிர இதைத் தொடமாட்டார்கள்.
Ayah : 80
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
Ayah : 81
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
ஆக, இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து, இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கிறீர்களா?
Ayah : 82
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
இன்னும், நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?
Ayah : 83
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
ஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
Ayah : 84
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கிறீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)
Ayah : 85
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக சமீபமாக இருக்கிறோம். என்றாலும், நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும்போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)
Ayah : 86
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
ஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
Ayah : 87
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
(அந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமே?
Ayah : 88
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) சமீபமான (நல்ல)வர்களில் உள்ளவராக இருந்தால்,
Ayah : 89
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
(அவருக்கு மறுமையில் மகத்தான) அருளும் (நல்ல) உணவும் (உயர்ந்த நறுமணமும்) “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.
Ayah : 90
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
ஆக, (இறந்தவர்) வலது பக்கம் உடையவர்களில் உள்ளவராக இருந்தால்,
Ayah : 91
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
(ஓ நல்லவரே!) வலது பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு ஸலாம் (பாதுகாப்பும் ஈடேற்றமும்) உண்டாகுக!
Ayah : 92
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
ஆக, அவர் வழிகெட்டவர்களில், பொய்ப்பித்தவர்களில் உள்ளவர்களாக இருந்தால்,
Ayah : 93
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
கடுமையாக கொதிக்கின்ற சுடுநீரின் விருந்தும்,
Ayah : 94
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கூலியாக இருக்கும்).
Ayah : 95
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.
Ayah : 96
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
Pengiriman sukses