Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة القمر - ஸூரா கமர்

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ
மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.
Ayah : 2
وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கிறார்கள்; இன்னும், (இது) இல்லாமல் போகும் மந்திரமாகும் என்றும் கூறுகிறார்கள்.
Ayah : 3
وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ
இன்னும், அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் கெட்ட ஆசைகளை பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். பாவம், பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
Ayah : 4
وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ
திட்டவட்டமாக எச்சரிக்கை உள்ள செய்திகள் அவர்களிடம் வந்துவிட்டன.
Ayah : 5
حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ
மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம்) வந்திருக்கிறது. ஆக, எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
Ayah : 6
فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ
ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கியும் அதன் விசாரணையை நோக்கியும்) அழைக்கின்ற நாளில்,

Ayah : 7
خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ
அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.
Ayah : 8
مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ
அழைப்பாளரை நோக்கி பணிவுடன், பயத்துடன், விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாளாகும்.”
Ayah : 9
۞ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ
(குறைஷிகளாகிய) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் (தூதர்களை) பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினார்கள். இன்னும், அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
Ayah : 10
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ
ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
Ayah : 11
فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ
ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.
Ayah : 12
وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ
இன்னும், பூமியின் ஊற்றுக் கண்களை பீறிட்டு ஓடச்செய்தோம். ஆக, (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக திட்டமாக சந்தித்தன.
Ayah : 13
وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ
இன்னும், அவரை பலகைகளும் ஆணிகளுமுடைய கப்பலில் பயணிக்க வைத்தோம்.
Ayah : 14
تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ
அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப்படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்குக் கூலி கொடுப்பதற்காக.
Ayah : 15
وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
அதை ஓர் அத்தாட்சியாக திட்டவட்டமாக நாம் விட்டுவைத்தோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 16
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
Ayah : 17
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 18
كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
Ayah : 19
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை) நீடித்து நிலையாக இருக்கும் (தண்டனை உடைய) ஒரு தீய நாளில் அனுப்பினோம்.
Ayah : 20
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ
அது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.
Ayah : 21
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
Ayah : 22
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 23
كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ
ஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Ayah : 24
فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ
ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால், நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம்.”
Ayah : 25
أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ
“எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் ஆவார்.”
Ayah : 26
سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ
“பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் யார்” என்பதை நாளை அவர்கள் அறிவார்கள்,
Ayah : 27
إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ
நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். ஆக, அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற தண்டனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும், (சகிப்புடன்) பொறுமையாக இருப்பீராக!

Ayah : 28
وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ
“(ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) நிச்சயமாக தண்ணீர் அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும்” என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிப்பதற்குறிய எல்லா நேரங்களிலும் அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டுமே வர வேண்டும்.
Ayah : 29
فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ
ஆக, (அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் நண்பனை அழைத்தனர். ஆக, அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்தான், ஆக, அவன் (அதை) அறுத்து விட்டான்.
Ayah : 30
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
Ayah : 31
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சத்தத்தை அனுப்பினோம். ஆக, அவர்கள் (கால்நடை) தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
Ayah : 32
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 33
كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ
லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Ayah : 34
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
Ayah : 35
نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ
நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Ayah : 36
وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ
திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். ஆக, அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
Ayah : 37
وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள அடம்பிடித்தனர். ஆக, நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
Ayah : 38
وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ
(நரகம் வரை) தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடிய தண்டனையானது காலையில் (-அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்) அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
Ayah : 39
فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
Ayah : 40
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 41
وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ
இன்னும், ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை திட்டவட்டமாக வந்தன.
Ayah : 42
كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ
அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிகைத்தவன், மகா ஆற்றலுள்ளவன் உடைய தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
Ayah : 43
أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ
உங்கள் (இக்கால) நிராகரிப்பாளர்கள், (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (உங்களை தண்டிக்காமல் அல்லாஹ் விட்டுவிடுவானா? நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்.) அல்லது, (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய) விடுதலை பத்திரம் உங்களுக்கு (முந்திய) வேதங்களில் (கூறப்பட்டு) இருக்கிறதா?
Ayah : 44
أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ
அல்லது, “நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கிற ஒருங்கிணைந்த கூட்டம் ஆவோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா?
Ayah : 45
سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ
(அல்லாஹ்வின் தூதரை எதிர்க்கும்) இந்த கூட்டங்கள் எல்லாம் விரைவில் தோற்கடிக்கப்படுவார்கள். இன்னும், புறமுதுகு காட்டுவார்கள்.
Ayah : 46
بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ
மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமையோ மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
Ayah : 47
إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ
நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைத்தல், சிலைவணக்கம் என்ற) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கிறார்கள்.
Ayah : 48
يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ
நரகத்தில் அவர்களுடைய முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படுகின்ற நாளில், “சகர் நரகத்தின் கடுமை(யான வலிகளை உடைய தண்டனை)யை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
Ayah : 49
إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.

Ayah : 50
وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ
(“ஆகு” என்று நாம் கூறுகின்ற) ஒற்றை வார்த்தையைத் தவிர நமது கட்டளை இல்லை, (நாம் எதை கட்டளையிட்டோமோ அது உடனே ஆகிவிடும்) கண் சிமிட்டுவதைப் போல்.
Ayah : 51
وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். ஆக, நல்லுபதேசம் பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
Ayah : 52
وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ
அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.
Ayah : 53
وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ
இன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.)
Ayah : 54
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கத்து தோட்டங்களிலும் நதிகளிலும் இருப்பார்கள்.
Ayah : 55
فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ
(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய (பொய்யும் பாவமுமற்ற) சபையில், பேராற்றலுடையவனான (மகா வல்லமைமிக்கவனான) பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.
Pengiriman sukses