Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة النمل - ஸூரா நம்லு

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ
தா சீன். (இப்போது ஓதிகாட்டப்படும்) இவை இந்த குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்.
Ayah : 2
هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
(இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
Ayah : 3
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்தை கொடுப்பார்கள், இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.
Ayah : 4
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய (தீய) செயல்களை (நல்ல செயல்களாக) அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
Ayah : 5
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ
அவர்கள் எத்தகையோர்கள் என்றால் கெட்ட தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும் மறுமையில் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Ayah : 6
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ
நிச்சயமாக நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து நீர் இந்த குர்ஆனை (கற்றுக் கொடுக்கப்பட்டு) மனனம் செய்து கொடுக்கப்படுவீர்.
Ayah : 7
إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ
அந்த சமயத்தை நினைவு கூர்வீராக! மூஸா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை; அல்லது, (அதிலிருந்து) எடுக்கப்பட்ட நெருப்புக் கொள்ளியை நீங்கள் குளிர் காய்வதற்காக உங்களிடம் கொண்டு வருகிறேன்.”
Ayah : 8
فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
ஆக, அவர் அதனிடம் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டு “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவனும் இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் புனிதமானவர்கள் என்று நற்செய்தி கூறப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (எல்லா குறைகளை விட்டு) மிக்க பரிசுத்தமானவன்.”
Ayah : 9
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
“மூஸாவே! நிச்சயமாக நான்தான் மிகைத்தவனும் மகா ஞானமுடையவனுமாகிய அல்லாஹ் ஆவேன்.”
Ayah : 10
وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ
“உமது தடியைப் போடுவீராக! ஆக, அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டு திரும்பி (ஓடி)னார். அவர் திரும்பி பார்க்கவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் இறைத்தூதர்கள் பயப்பட மாட்டார்கள்.”
Ayah : 11
إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ
“(எனினும் தூதர்களில்) யார் தவறிழைத்தாரோ அவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தாரோ அவரை நான் மன்னித்து விடுவேன். ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவேன்.”
Ayah : 12
وَأَدۡخِلۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖۖ فِي تِسۡعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرۡعَوۡنَ وَقَوۡمِهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
“இன்னும், உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னுகின்ற வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (அகிலங்களின் இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”
Ayah : 13
فَلَمَّا جَآءَتۡهُمۡ ءَايَٰتُنَا مُبۡصِرَةٗ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ
ஆக, (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தபோது, “இது தெளிவான சூனியம்” என்று கூறினார்கள்.

Ayah : 14
وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ
(அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது அத்தாட்சிகளை காண்பித்தான்.) அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன. ஆக, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Ayah : 15
وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ
திட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) கல்வி அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினார்கள்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”
Ayah : 16
وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ
தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் அவரின் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். இன்னும், (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லா பொருள்களையும் நாங்கள் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
Ayah : 17
وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ
ஸுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய இராணுவங்கள் ஒன்றுதிரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து வரிசை ஒழுங்குடன் செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்.
Ayah : 18
حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
இறுதியாக, (ஒரு பயணத்தில்) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய இராணுவங்களும் உங்களை (மிதித்து) அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் கீழே இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.
Ayah : 19
فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ
ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ எந்த நல்லதைக் கொண்டு திருப்தி அடைவாயோ அதை நான் செய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து!) இன்னும், உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”
Ayah : 20
وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَالِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ
இன்னும், அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை. அப்போது) எனக்கென்ன ஏற்பட்டது, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது, அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார்.
Ayah : 21
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
“நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது, அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக தெளிவான ஆதாரத்தை என்னிடம் கொண்டுவர வேண்டும்.”
Ayah : 22
فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ
ஆக, அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்த பின்னர்) சிறிது நேரம்தான் தாமதித்தார். (அதற்குள் ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது.) ஆக, அது கூறியது: “(ஸுலைமானே!) நீர் அறியாததை நான் அறிந்து (வந்து)ள்ளேன். இன்னும், ‘சபா’ நாட்டவர்களிடமிருந்து உறுதியான செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்.

Ayah : 23
إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ
நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண், அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். இன்னும், (ஆட்சிக்கு தேவையான) பொருள்கள் எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். இன்னும், அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த) அரச கட்டிலும் உள்ளது.
Ayah : 24
وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ
இன்னும், அவளையும் அவளுடைய மக்களையும் - அவர்கள் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குபவர்களாக - கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (தீய) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆக, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆக, (அல்லாஹ்வின் பக்கம்) அவர்கள் நேர்வழி பெறாமல் இருக்கிறார்கள்.
Ayah : 25
أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்றவனும்; இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்றவனுமாகிய அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது கெட்ட செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).
Ayah : 26
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩
அல்லாஹ் - மகத்தான அர்ஷுடைய அதிபதியாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
Ayah : 27
۞ قَالَ سَنَنظُرُ أَصَدَقۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
(ஸுலைமான்) கூறினார்: “நீ உண்மை கூறினாயா, அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்வோம்.
Ayah : 28
ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ
எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! ஆக, இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! ஆக, அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!”
Ayah : 29
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ
(ஹுத்ஹுத் கடிதத்தை எடுத்து சென்று அரசியின் முன் போட்டது. அப்போது அந்த அரசி) கூறினாள்: “முக்கிய பிரமுகர்களே! நிச்சயமாக நான், ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.”
Ayah : 30
إِنَّهُۥ مِن سُلَيۡمَٰنَ وَإِنَّهُۥ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: “பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் (இதை எழுதுகிறேன்).
Ayah : 31
أَلَّا تَعۡلُواْ عَلَيَّ وَأۡتُونِي مُسۡلِمِينَ
அதாவது, என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி நடக்காதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்!”
Ayah : 32
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ
அவள் கூறினாள்: “முக்கிய பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (அதில் கருத்து கூறுகி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.”
Ayah : 33
قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உடல்) பலமுடையவர்கள்; இன்னும், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். ஆனால், முடிவு உன்னிடமே இருக்கிறது. ஆகவே, நீ (முடிவாக கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு யோசி(த்து முடிவெடு)ப்பாயாக!
Ayah : 34
قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ
அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர்வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள். (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.”
Ayah : 35
وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ
“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதிலை திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன். (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)”

Ayah : 36
فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ
ஆக, (அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, (சுலைமான்) கூறினார்: “செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்ததாகும். மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்பினால் பெருமிதம் அடைவீர்கள். (நான் அதை ஏற்க மாட்டேன்.)”
Ayah : 37
ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ
“நீ அவர்களிடம் திரும்பிப் போ! ஆக, நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை எதிர்ப்பதற்கு அவ(ளின் வீரர்க)ளுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும், நிச்சயமாக அவர்களை அ(வர்களின் நகரத்)திலிருந்து இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். இன்னும், அவர்கள் சிறுமைப்படுவார்கள்.”
Ayah : 38
قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ
அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “முக்கிய பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை - அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் - கொண்டு வருவார்.”
Ayah : 39
قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ
ஜின்களில் (கடும் தந்திரமும் வலிமையும் வீரமும் முரட்டுக் குணமும் உடைய) பராக்கிரமசாலி கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு நான்) நம்பிக்கைக்குரியவன் ஆவேன்.
Ayah : 40
قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ
தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த (மனிதர்) ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர்,) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” ஆக, (அவ்வாறே கொண்டு வரப்பட்ட) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) முழுமையாக வந்து சேர்ந்து விட்டதை சுலைமான் பார்த்தபோது, (எனது இந்த ஆட்சி, அதிகாரம், படைபலம், அறிவு ஆகிய) இவை என் இறைவனின் அருளினால் கிடைத்ததாகும். நான் நன்றி செலுத்துகிறேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா என்று அவன் என்னை சோதிப்பதற்காக (இவற்றை எனக்கு தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் கணக்கின்றி கொடுக்கும்) பெரும் தயாளன் ஆவான்.
Ayah : 41
قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ
அவர் கூறினார்: “நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், அவள் (தனது பொருளை) அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் (தமது பொருளை) அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?”
Ayah : 42
فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ
ஆக, அவள் வந்தபோது, “இது உனது அரச கட்டில் போன்றா இருக்கிறது?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான் இருக்கிறது.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டு இருக்கிறோம். இன்னும், நாம் முஸ்லிம்களாக (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக) இருக்கிறோம்.
Ayah : 43
وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ
அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அல்லாஹ்வை அவள் வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.
Ayah : 44
قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
“நீ மாளிகையில் நுழை!” என்று அவளுக்கு கூறப்பட்டது. அவள் அதைப் பார்த்தபோது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: “நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் சேர்ந்து நானும் (பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்.”

Ayah : 45
وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ
திட்டவட்டமாக நாம் ஸமூது (மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நமது தூதராக) அனுப்பினோம், “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையிடுவதற்காக). ஆனால், அவர்களோ தங்களுக்குள் இரண்டு பிரிவுகளாக ஆகி தர்க்கித்துக் கொண்டனர்.
Ayah : 46
قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
(ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! (இறைவனின் அருளாகிய) நன்மைக்கு முன்னதாக (அவனின் தண்டனையாகிய) தீமையை ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?”
Ayah : 47
قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ
அவர்கள் கூறினார்கள்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துர்ச்சகுனம் அடைந்தோம்.” அவர் கூறினார்: “(மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள் ஆவீர்கள்.”
Ayah : 48
وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அந்த) பூமியில் கடும் தீமைகளை செய்தனர். அவர்கள் நல்லதை செய்யவில்லை.
Ayah : 49
قَالُواْ تَقَاسَمُواْ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهۡلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدۡنَا مَهۡلِكَ أَهۡلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ
அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்ப(மு)ம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் பிரசன்னமாகி இருக்கவில்லை, நிச்சயமாக நாங்கள் (இது விஷயத்தில்) உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.”
Ayah : 50
وَمَكَرُواْ مَكۡرٗا وَمَكَرۡنَا مَكۡرٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ
இன்னும், அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். இன்னும், நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்களோ (நமது சூழ்ச்சியை) உணராதவர்களாக இருந்தனர்.
Ayah : 51
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ
ஆக, அவர்களுடைய சூழ்ச்சியின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவானது:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்.
Ayah : 52
فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ
இதோ அவர்கள் செய்த அநியாயத்தால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. கல்வி ஞானமுள்ள மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Ayah : 53
وَأَنجَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
இன்னும், நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்.
Ayah : 54
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
இன்னும், லூத்தையும் (தூதராக நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.”
Ayah : 55
أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ
“பெண்களை தவிர்த்துவிட்டு ஆண்களிடமா நீங்கள் (உங்கள் சரீர) இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறுவதால் நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள்.”

Ayah : 56
۞ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوٓاْ ءَالَ لُوطٖ مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ
ஆக, அவருடைய மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் சுத்தமாக இருக்கின்ற மனிதர்கள்” என்பதாகவே தவிர இல்லை.
Ayah : 57
فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَٰهَا مِنَ ٱلۡغَٰبِرِينَ
ஆக, அவருடைய மனைவியைத் தவிர நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். (ஊரில்) மிஞ்சி இருப்பவர்களில் அவளை (இருக்க வைத்து நமது தண்டனை இறங்கும்போது அவள் அழிக்கப்படவேண்டும் என்று) முடிவு செய்தோம்.
Ayah : 58
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
இன்னும், அவர்கள் மீது (தண்டனையின்) மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (தண்டனைக்காக இறக்கப்பட்ட மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.
Ayah : 59
قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصۡطَفَىٰٓۗ ءَآللَّهُ خَيۡرٌ أَمَّا يُشۡرِكُونَ
(நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்(களாகிய உம்மீதும் உமது தோழர்)கள் மீதும் ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது, அவனல்லாத படைப்புகளை வணங்குவது சிறந்ததா?)”
Ayah : 60
أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٖ مَّا كَانَ لَكُمۡ أَن تُنۢبِتُواْ شَجَرَهَآۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ هُمۡ قَوۡمٞ يَعۡدِلُونَ
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது எதையும் படைக்க ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் (அல்லாஹ்வுடன் படைப்புகளை) இணைவைக்கின்ற மக்கள் ஆவார்கள்.
Ayah : 61
أَمَّن جَعَلَ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنۡهَٰرٗا وَجَعَلَ لَهَا رَوَٰسِيَ وَجَعَلَ بَيۡنَ ٱلۡبَحۡرَيۡنِ حَاجِزًاۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
அல்லது, எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிறந்தவர்களா?) (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தையும் தாங்கள் வணங்கும் பொய்யான தெய்வங்களின் பலவீனத்தையும்) அறியமாட்டார்கள்.
Ayah : 62
أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ ٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு - அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு) - பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
Ayah : 63
أَمَّن يَهۡدِيكُمۡ فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَمَن يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦٓۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ
அல்லது, தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாத சிலைகள் சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.

Ayah : 64
أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
அல்லது, எவன் படைப்புகளை முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகிறானோ, இன்னும் மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கிறானோ அவன் சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவை சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (வழிபாடுகளுக்கு) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!”
Ayah : 65
قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.”
Ayah : 66
بَلِ ٱدَّٰرَكَ عِلۡمُهُمۡ فِي ٱلۡأٓخِرَةِۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّنۡهَاۖ بَلۡ هُم مِّنۡهَا عَمُونَ
அது மட்டுமா, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிய முடியாமல் இருக்கிறார்கள்.)
Ayah : 67
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَءِذَا كُنَّا تُرَٰبٗا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخۡرَجُونَ
இன்னும், நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவோமா?”
Ayah : 68
لَقَدۡ وُعِدۡنَا هَٰذَا نَحۡنُ وَءَابَآؤُنَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
“திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். (ஆனால், இதுவரை அப்படி நடக்கவில்லையே! ஆகவே,) இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் அன்றி வேறு இல்லை.”
Ayah : 69
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ
(நபியே!) கூறுவீராக! “பூமியில் (அழிக்கப்பட்ட மக்களின் ஊர்களுக்கு) செல்வீர்களாக! ஆக, குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்) பார்ப்பீர்களாக!”
Ayah : 70
وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُن فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ
அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர்! இன்னும், அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்வதால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்!
Ayah : 71
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது நிகழும்?”
Ayah : 72
قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعۡضُ ٱلَّذِي تَسۡتَعۡجِلُونَ
(நபியே!) கூறுவீராக: “(தண்டனைகளில்) நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு விரைவில் வரக்கூடும்.”
Ayah : 73
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ
நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Ayah : 74
وَإِنَّ رَبَّكَ لَيَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்.
Ayah : 75
وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ
வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை, (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
Ayah : 76
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَكۡثَرَ ٱلَّذِي هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَ
நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது.

Ayah : 77
وَإِنَّهُۥ لَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ
நிச்சயமாக இ(ந்த வேதமான)து நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.
Ayah : 78
إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ
நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன் ஆவான்.
Ayah : 79
فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۖ إِنَّكَ عَلَى ٱلۡحَقِّ ٱلۡمُبِينِ
ஆக, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கிறீர்.
Ayah : 80
إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ
நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் - அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால் - (இந்த ஏகத்துவ) அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
Ayah : 81
وَمَآ أَنتَ بِهَٰدِي ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ
இன்னும், (அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்கள் ஆவார்கள்.
Ayah : 82
۞ وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ
அவர்கள் மீது (இனி அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற) நமது வாக்கு உறுதியாக நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளை உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்” என்று அவர்களிடம் அது பேசும்.
Ayah : 83
وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ
இன்னும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகிற நாளை நினைவு கூர்வீராக! ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் (மஹ்ஷர் மைதானத்தில்) தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
Ayah : 84
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبۡتُم بِـَٔايَٰتِي وَلَمۡ تُحِيطُواْ بِهَا عِلۡمًا أَمَّاذَا كُنتُمۡ تَعۡمَلُونَ
இறுதியாக, அவர்கள் (எல்லோரும் மறுமையில் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம்) வந்து விடும்போது (அல்லாஹ்) கூறுவான்: “எனது அத்தாட்சிகளை - அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்கும் நிலையில் - நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அல்லது, நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”
Ayah : 85
وَوَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِم بِمَا ظَلَمُواْ فَهُمۡ لَا يَنطِقُونَ
இன்னும், அவர்கள் (இம்மையில்) செய்த தீமைகளால் (அல்லாஹ்வின் தண்டனையின்) கூற்று அவர்கள் மீது (மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் (விசாரணையின் போது எதிர்த்து) பதில் பேசமாட்டார்கள்.
Ayah : 86
أَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا ٱلَّيۡلَ لِيَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் அமைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Ayah : 87
وَيَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَفَزِعَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۚ وَكُلٌّ أَتَوۡهُ دَٰخِرِينَ
இன்னும், எக்காளத்தில் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் (-பயத்தால் நடுங்கி) திடுக்கிடுவார்கள். ஆனால், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. (போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது.) இன்னும், எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
Ayah : 88
وَتَرَى ٱلۡجِبَالَ تَحۡسَبُهَا جَامِدَةٗ وَهِيَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِۚ صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِيٓ أَتۡقَنَ كُلَّ شَيۡءٍۚ إِنَّهُۥ خَبِيرُۢ بِمَا تَفۡعَلُونَ
(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று சென்றுகொண்டிருக்கும். (இது,) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

Ayah : 89
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَا وَهُم مِّن فَزَعٖ يَوۡمَئِذٍ ءَامِنُونَ
(லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற) நன்மையை யார் கொண்டு வருவாரோ அவருக்கு அதன் காரணமாக (சொர்க்கமாகிய) சிறந்தது (கூலியாக) உண்டு. இன்னும், அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.
Ayah : 90
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتۡ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
இன்னும், யார் (இணைவைத்தல், பாவம் என்ற) தீமையை கொண்டுவருவாரோ அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்துகொண்டு இருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று அவர்களிடம் கூறப்படும்.)
Ayah : 91
إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ رَبَّ هَٰذِهِ ٱلۡبَلۡدَةِ ٱلَّذِي حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَيۡءٖۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ
(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம், இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். இன்னும், அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவையாகும். இன்னும், நான் (அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற) முஸ்லிம்களில் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.
Ayah : 92
وَأَنۡ أَتۡلُوَاْ ٱلۡقُرۡءَانَۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَقُلۡ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُنذِرِينَ
இன்னும், (இந்த) குர்ஆனை நான் (மக்களுக்கு முன்) ஓதுவதற்கும் (கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் (அந்த குர்ஆன் மூலம்) நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகிறானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”
Ayah : 93
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
இன்னும் (நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிவீர்கள்.” இன்னும், (நபியே!) உமது இறைவன் (இணைவைப்பவர்களாகிய) நீங்கள் செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும் உமக்கு வெற்றியும் உண்டு.)
Pengiriman sukses