Ayah :
1
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது.
Ayah :
2
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
Ayah :
3
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Ayah :
4
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Ayah :
5
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
Ayah :
6
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
Ayah :
7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
Ayah :
8
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.